Tuesday, October 19, 2010

துயரக் கடிதம்

முந்தைய மடல்கள் இதோ  - மடல்-1 மடல்-2

மடல் - 3 
 

வினுதா செல்லும் வழியை தொடர ஆரம்பித்தான் அபினவ். அவள் வேகம் மிகவும் குறைவாய் இருந்தது. பாவம் ரொம்ப வலிக்குது போலருக்கு.. பாத்து வந்துர்கலாம் என்று வருத்தப்பட்டான். பைக்கில் பின் தொடர்வது கடினம் என்று எண்ணிய அபி பைக்கை சாலை ஓரமாய் நிறுத்தி விட்டு நடக்க ஆரம்பித்தான்.

"எப்படியும் இவ வீடு பக்கத்துல தான் இருக்கும்.. நடந்து தான போறா.. பஸ் ஸ்டாப்ல வெய்ட் பண்ணல.. இவ வீட இன்னிக்கி கண்டு பிடிச்டனும்" என்று எண்ணிக் கொண்டு அவளை தொடர்ந்து ஃபாலோ செய்தான். "ஃபாலோ பண்றத கண்டுபிடிச்டா என்ன பண்றது?" என்ற கேள்வி அவனுள் முளைத்தது. உடனே நண்பன் ஒருவன் கூறிய டைலாக் பொறியில் தட்டியது. "மச்சான், பொண்ணுங்கள ஃபாலோ பண்ரப்ப நம்ம தாண்டா கவல படறோம் அவங்களுக்கு தெரியாம ஃபாலோ பண்ணனும்னு. ஆனா நம்ம மனசுல ஃபாலோ பண்ணனும்னு தோணின உடனேயே அது அவங்களுக்கும் தெரிஞ்சிடும். சும்மா தெரியாத மாதிரி வெட்டி சீன் பொடுவாங்க அவ்ளோதான்".

"ஒரு வேல நம்ம அவ பின்னாடி வந்துட்டு இருக்கறது தெரிஞ்சுர்குமோ... இருக்காது" என்று யோசித்து கொண்டிருக்கையில், "என்ன மிஸ்டர் உங்களுக்கு வேல வெட்டி எதுவும் இல்லயா.. எதுக்கு இப்பிடி பின்னாடி காணதத கண்டா மாதிரி வரீங்க.. போய் புள்ள குட்டிய படிக்க வெக்கிற வழிய பாருங்க.. போங்க" என்றாள் வினுதா..

"எனக்கு வேல வெட்டிலாம் இல்லங்க.. நான் MBA finance படிச்சுட்டுருக்கேன்.. also எனக்கு புள்ள குட்டியும் இல்ல.. அழகான பொண்ணா தேடிட்டு இருக்கேன் to get புள்ள குட்டி" என்று சற்று நக்கலாய் பதிலளித்தான். "ஜோக் அடிகர்தா நெனப்பு.. போய்யா வேலய பாத்துட்டு.. யாரு கேட்டா உன் பயோ-டேட்டா.. ஹ்ம்ம்ம்" என்று சொல்லி விட்டு அழகாய் இதழ்களை இரு முறை கோணிக்கொண்டாள்.

"இல்லங்க இது பயோ-டேட்டா இல்ல.. நீங்க கேட்ட கேள்விக்கு பதில்.. பயோ-டேட்டானா பேரு இருக்கும்ல.. i forgot to say my name.. நான் அபினவ்.. நீங்க"..

"அதான் ஏரியாக்கு 10 friends வெச்சு இருப்பீங்களே பொண்ணுங்க பேரு அட்ரெஸ் போன் நம்பர்லாம் கண்டுபிடிக்க.. அந்த நிபுணர் குழு கிட்ட சொல்லி கண்டுபிடிக்க சொல்லு" என்று அந்த இடத்தை விட்டு நகர்ந்தாள்..

"இது நக்கல் நையாண்டி மண்ட கணம் பிடிச்ச பார்ட்டியா இருக்கும் போலருக்கே.. அபி விடாதடா அவள" என்று தனக்குள் கூறிக் கொண்டு தொடர்ந்து அவளை ஃபாலோ செய்தான்..
ஒரு 15 நிமிடம் நடந்திருப்பாள் வினுதா.. அபியும் அவளை பின் தொடர்ந்து வந்திருந்தான். ஒரு அழகிய சிறு வீட்டிற்குள் நுழைந்தாள்.. சங்கீத சத்தம் இனிமையாய் கேட்டு கொண்டிருந்தது அந்த வீட்டிலிருந்து.. "ஆயாயோ இது தா தா ரி நா பார்ட்டி போலருக்கே" என்று அங்கலாய்த்துக் கொண்டான். "சரி கொஞ்ச நேரம் கேட்டு தான் பாப்போம்" என்று எண்ணி அங்கேயே நின்றான்.

"சமயாநிக்கி தகு மாதலாடனே பா மகரிரி" என்று மெல்ல அந்த சங்கீதத்தில் வினுதாவின் குரலும் இணைந்து, இசையை மேலும் இனிமை ஆக்கியது.

(தொடர்ந்து எழுதுவோம்..)

துயரக் கடிதம்.. 2

முந்தைய மடல்கள் இதோ  - மடல்-1

மடல் - 2 

வினுதா செல்லும் வழியையே வெறித்து பார்த்து கண்ணீர் சிந்திக் கொண்டிருந்தான் அபினவ். சுமார் 5 நிமிடங்கள் கடந்திருக்கும். மெல்லமெல்ல அவன் கண்ணீர் வறண்டு போக தொடங்கியது. இயல்பு நிலைக்கு திரும்பியவனாய் கடல் அலைகளின் பக்கம் கவனத்தைதிருப்பினான். கண்கள் மட்டுமே அவன் நினைத்ததை செய்தன அனால் மனமோ இன்னமும் வினுதா சென்ற திசை நோக்கி பறந்துகொண்டிருந்தது.
ஒளியினும் வேகமாய் பயணிக்க கூடிய ஒன்று உண்டெனில் அது மனித மனமே . நொடியில் பல்லாண்டுகள் பின்னோக்கி உருளும். சமயம் பார்த்து பல ஆண்டுகள் கழித்து நடக்கப்போவதை கற்பனை செய்யும். ஆனால் அது கடந்த காலத்தை நோக்கிப்  பயணித்தாலும்எதிர் காலத்தை கற்பனை செய்தாலும், நிகழ் காலத்தில் அதன் நிலை துயரமாகத்தான் இருக்க வேண்டும். மகிழ்ச்சியாய் இருக்கும் சமயம்மனம் கடந்த கால நினைவுகளை அசை போடுவதில்லை. அபினவின் மனமும் வேகமாய் பயணித்தது.
சுமார் ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு...
எத்திராஜ் கல்லூரி வளாகம்..
ரம்பை ஊர்வசி மேனகை போன்ற பெண்களை இங்கு பலர் தேடி ஏமாந்து போனாலும் சிலருக்கு அதிர்ஷ்டம் அடிக்கத்தான் செய்கிறது.. அப்படிப்பட்ட அபூர்வமான அதிர்ஷ்டசாளிகளில் அபினவும் ஒருவன்..
அபினவ் மனம் முழுதும் ஸ்பென்சர்இல் .. லயோலா b - school இல் முதல் ஆண்டு சேர்ந்து சரியாய் 4 வாரங்கள் தான் ஓடியிருக்கும்.. வகுப்புகள் வழக்கம் போல் அலுக்க ஆரம்பித்தன. நண்பனிடம் இருந்து sms "மச்சி ஸ்பென்சர்ல இருக்கேன் கிளாஸ் முடிஞ்சதும்வந்துடு".. விக்கியின் sms இருந்த கொஞ்ச நஞ்ச ஆர்வத்திலும் மண் அள்ளி போட்டது.
கல்லூரி முடிந்ததும் நேரே நெரிசல் மிகு கல்லூரி சாலையில் 40 களிலும் 20 களிலும் மாறி மாறி pulsar ஐ முறுக்கினான். எத்திராஜ்கல்லூரி நெருங்கியவுடன் கண்கள் தானாய் அலை பாயத் தொடங்கியது.. மெல்ல பைக்கின்    வேகமும் தணிந்தது .. சாலையை கடக்க  தயாராய் இருந்த ஒரு பெண்ணின் காலில் அபினவோட பல்சரின் முன் சக்கரம் ஏறியது.. அம்ம்ம்ம்மா என்ற சிறுஅலறலை தொடர்ந்து "பொறம்போக்கு பார்த்து போக மாட்டே" வார்த்தைகள் கடினமாய் இருந்தாலும் குரல் மிகவும் இனிமையாய்ஒலித்தது அபினவிற்கு..
"sorry  தெரியாம ஏறிடிச்சு" என்றவனின் வார்த்தையை காது கொடுத்து கேளாமல் தன் வழியே சென்றாள் அந்த பெண் விந்தி விந்தி.. வண்டியை stand போட்டு விட்டு அவளை நோக்கி சென்றான் அபி.. "ஏங்க sorry ங்க தெரியாம ஏறிடுச்சு.. நீங்க எங்க போனும்னுசொல்லுங்க நான் drop பண்ணிடறேன்" என்றவனுக்கு "ஆணியே புடுங்க வேணாம்" என்ற பதிலே கிடைத்தது..
அவளை பார்த்த மாத்திரத்திலேயே ஒரு இனம் புரியாத உணர்வு அபி மனதுள் பொங்கியது.. அவன் உள்ளுணர்வு அந்தப் பெண்ணைதொடரச் சொல்லியது.. அவன் வண்டி அவன் அனுமதியின்றி அதனை செய்ய தொடங்கியது..
ஸ்பென்சரில்  காத்திருந்த நண்பனுக்கு அபியின் பயணம் எத்திராஜுடன் திசை மாறியது தெரிந்திருக்க நியாமில்லை..

-தொடர்ந்து எழுதுவோம்

துயரக் கடிதம்.. 1

முகப்பு:

என் வலைப்பூவில் வரும் எனது முதல் தமிழ் கதை.. துயரக் கடிதம்.. இதனை ஒரு online இதழுக்காக எழுத ஆரம்பித்தேன்.. சில காரணங்களால் அந்த இதழ் நிறுத்தப்பட இப்பொழுது கதை தொடர்கிறது என் வலைப்பூவில்.. இதன் 2 மடல்கள் ஏற்கனவே வெளிவந்தவை.. மூன்றாவது மடல் முதல் தொடர்ந்து இவ்வலைப்பூவில் வெளி வரும்.. உங்கள் ஆதரவை பணிவோடு வேண்டி இதோ உங்கள் கணினி தேடி வருகிறது இத்துயரக் கடிதம்..


மடல்-1

அழகிய மாலை நேரம்.. அலைகளும் மனித தலைகளும் மோதும் மெரினா கடற்கரை.. வழக்கமான விடுமுறை நாள் மாலையில் காணக் கிடைக்கும் அனைத்து நிகழ்வுகளும்அழகழகாய்.. பலூன் விளையாடும் குழந்தைகள், சுண்டல் மாங்காய் வியாபாரிகள், குடும்பத்துடன் மாலையின் ஆழி அழகை அனுபவிக்க வந்தவர்கள் இன்னும் பலதரப்பட்ட மக்கள்..

எவ்வளவு கூட்டம் இருந்தாலும் காதலர்களுக்கு மட்டும் எப்படியும் தனியாக அமர்ந்துபேச ஆள் அரவம் அற்ற இடம் எளிதாய் கிடைக்கும் இங்கு.. அப்படிப்பட்ட ஒரு தனிஇடத்தில் கையில் அலைபேசியுடன், கால்களை குவித்து அதில் முகம் புதைத்துஅமர்ந்திருந்தாள் வினுதா.. பார்த்தவுடன் அழகு தேவதை இவள்தான் என்றுஅனைவரையும் சொல்ல வைப்பது போல் ஒரு தோற்றம் .. நீல நிற சுடிதாரில் கடல்தேவதை தான் கரையில் வந்து அமர்ந்து இருக்கிறாளோ என நினைக்க வைத்தாள்.. ஆனால் அவள் அமர்ந்திருக்கும்  கோலம் அவளுக்குள் ஆயிரம் பூகம்பங்கள் நடந்துகொண்டிருப்பதை உணர்த்தியது..

ஒரு கருப்பு நிற பல்சர்  கடற்கரை மணலில் செல்ல எதுவாய் வேகம் குறைந்து நேராய்வினுதா அருகில் சென்று நின்றது.. வண்டியை சைடு ஸ்டாண்ட் போட்டு ஹெல்மெட்கழட்டினான் சுமார் 24 வயது மதிக்க தக்க அந்த இளைஞன். வினுதா இன்னமும்அசைவற்று அமர்ந்திருந்தாள் அழகுச் சிலையாய்..

பல்சர்  இளைஞன் நேராய் வினுதா அருகில் சென்று அமர்ந்தான். அவள் அழகைஇரண்டு நிமிடங்கள் ரசித்தவன் மெல்ல அவளை தொட்டு வினு என்று அழைத்தான்.. திடுக்கிட்ட அழகுப் பதுமை அவன் கைகளை தட்டி விட்டு "இது சரி வராது அபினவ்" என்றாள்..

காதலர்கள் எவ்வளவுதான் தனி இடம் கண்டு பிடித்தாலும் சுண்டல் சிறுவர்கள்எப்படியும் அந்த இடத்திற்கும் வந்து விடுவார்கள்.. "அக்கா சுண்டல் வாங்கிகங்க" என்றான்.. இதுவும் புரியாத ஒரு விஷயம் தான்.. அனைத்து சுண்டல் சிறுவர்களும்நேரே பெண்களிடம் தான் சுண்டல் விற்கிறார்களே தவிர கூட இருக்கும் ஆணிடம்கேட்பதில்லை.. இல்ல தம்பி வேணாம் என்றாள் காற்றுக்கு கூட வலிக்காத ஒலியில்..

வினுவின் வார்த்தைகளுக்கு இன்னமும் அர்த்தம் விளங்காத முகத்துடன் அபினவ் 5 ரூபாய்க்கு பட்டாணி சுண்டல் கொடு தம்பி என்றான்.. இடைமறித்த வினு 2 பொட்டலம் போட்டு கொடு என்றாள்.. "ஏன்கா எப்போதும் ஒரே பொட்டலத்தில் தான கேப்பீங்க" என்றவனுக்கு "உன் வேலைய மட்டும் பாரு" என்ற கோபமான பதிலே கிடைத்தது.. சுண்டல் சிறுவன் வேகமாய் அங்கிருந்து நகர்ந்தான்..

வினுவின் வழக்கத்திற்கு மாறான வித்தியாசமான செயல்களால் ரொம்பவேகுழம்பியிருந்த அபி வினுவிடம் "என்னாச்சு அவசரமா வர சொன்னே இங்க வந்தாஎல்லாமே வித்தியாசமா இருக்கு.. என்ன நடந்துச்சுன்னு தெளிவா சொல்லு" என்றவனுக்கு பேரிடி வரும் என்று தெரிந்திருக்க நியாயம் இல்லை..

"நடந்தது எல்லாமே உனக்கு தெரியும் அபி.. இன்னிக்கி என்ன நாள் தெரியுமா ஞாபகம்இருக்கா?" என்று ஆரம்பித்து தொடர்ந்து அவள் பேசிய வார்த்தைகள் அபினவின்நெஞ்சில் முள்ளாய் தைக்க தொடங்கியது.. மெல்ல கடல் நீர் அபினவின் விழிகளில்இருந்தும் கசிய தொடங்கியது.. சுமார் 15 நிமிடங்கள் இடை விடாது பேசிய வினு விடைஎதிர் பாராமல் விருட்டென அங்கிருந்து எழுந்து சென்றாள்.. அவளை பெயர் கூறிஅழைக்க கூட திராணி அற்று விழிகள் குளமாய் நின்றான் அபினவ்..

மெல்ல மெரினாவின் கடல் அலை அபினவின் இதயத்துள்ளும் மோத ஆரம்பித்ததுஆழிப் பேரலையாய்..

(தொடர்ந்து எழுதுவோம்..)