Tuesday, October 19, 2010

துயரக் கடிதம்.. 1

முகப்பு:

என் வலைப்பூவில் வரும் எனது முதல் தமிழ் கதை.. துயரக் கடிதம்.. இதனை ஒரு online இதழுக்காக எழுத ஆரம்பித்தேன்.. சில காரணங்களால் அந்த இதழ் நிறுத்தப்பட இப்பொழுது கதை தொடர்கிறது என் வலைப்பூவில்.. இதன் 2 மடல்கள் ஏற்கனவே வெளிவந்தவை.. மூன்றாவது மடல் முதல் தொடர்ந்து இவ்வலைப்பூவில் வெளி வரும்.. உங்கள் ஆதரவை பணிவோடு வேண்டி இதோ உங்கள் கணினி தேடி வருகிறது இத்துயரக் கடிதம்..


மடல்-1

அழகிய மாலை நேரம்.. அலைகளும் மனித தலைகளும் மோதும் மெரினா கடற்கரை.. வழக்கமான விடுமுறை நாள் மாலையில் காணக் கிடைக்கும் அனைத்து நிகழ்வுகளும்அழகழகாய்.. பலூன் விளையாடும் குழந்தைகள், சுண்டல் மாங்காய் வியாபாரிகள், குடும்பத்துடன் மாலையின் ஆழி அழகை அனுபவிக்க வந்தவர்கள் இன்னும் பலதரப்பட்ட மக்கள்..

எவ்வளவு கூட்டம் இருந்தாலும் காதலர்களுக்கு மட்டும் எப்படியும் தனியாக அமர்ந்துபேச ஆள் அரவம் அற்ற இடம் எளிதாய் கிடைக்கும் இங்கு.. அப்படிப்பட்ட ஒரு தனிஇடத்தில் கையில் அலைபேசியுடன், கால்களை குவித்து அதில் முகம் புதைத்துஅமர்ந்திருந்தாள் வினுதா.. பார்த்தவுடன் அழகு தேவதை இவள்தான் என்றுஅனைவரையும் சொல்ல வைப்பது போல் ஒரு தோற்றம் .. நீல நிற சுடிதாரில் கடல்தேவதை தான் கரையில் வந்து அமர்ந்து இருக்கிறாளோ என நினைக்க வைத்தாள்.. ஆனால் அவள் அமர்ந்திருக்கும்  கோலம் அவளுக்குள் ஆயிரம் பூகம்பங்கள் நடந்துகொண்டிருப்பதை உணர்த்தியது..

ஒரு கருப்பு நிற பல்சர்  கடற்கரை மணலில் செல்ல எதுவாய் வேகம் குறைந்து நேராய்வினுதா அருகில் சென்று நின்றது.. வண்டியை சைடு ஸ்டாண்ட் போட்டு ஹெல்மெட்கழட்டினான் சுமார் 24 வயது மதிக்க தக்க அந்த இளைஞன். வினுதா இன்னமும்அசைவற்று அமர்ந்திருந்தாள் அழகுச் சிலையாய்..

பல்சர்  இளைஞன் நேராய் வினுதா அருகில் சென்று அமர்ந்தான். அவள் அழகைஇரண்டு நிமிடங்கள் ரசித்தவன் மெல்ல அவளை தொட்டு வினு என்று அழைத்தான்.. திடுக்கிட்ட அழகுப் பதுமை அவன் கைகளை தட்டி விட்டு "இது சரி வராது அபினவ்" என்றாள்..

காதலர்கள் எவ்வளவுதான் தனி இடம் கண்டு பிடித்தாலும் சுண்டல் சிறுவர்கள்எப்படியும் அந்த இடத்திற்கும் வந்து விடுவார்கள்.. "அக்கா சுண்டல் வாங்கிகங்க" என்றான்.. இதுவும் புரியாத ஒரு விஷயம் தான்.. அனைத்து சுண்டல் சிறுவர்களும்நேரே பெண்களிடம் தான் சுண்டல் விற்கிறார்களே தவிர கூட இருக்கும் ஆணிடம்கேட்பதில்லை.. இல்ல தம்பி வேணாம் என்றாள் காற்றுக்கு கூட வலிக்காத ஒலியில்..

வினுவின் வார்த்தைகளுக்கு இன்னமும் அர்த்தம் விளங்காத முகத்துடன் அபினவ் 5 ரூபாய்க்கு பட்டாணி சுண்டல் கொடு தம்பி என்றான்.. இடைமறித்த வினு 2 பொட்டலம் போட்டு கொடு என்றாள்.. "ஏன்கா எப்போதும் ஒரே பொட்டலத்தில் தான கேப்பீங்க" என்றவனுக்கு "உன் வேலைய மட்டும் பாரு" என்ற கோபமான பதிலே கிடைத்தது.. சுண்டல் சிறுவன் வேகமாய் அங்கிருந்து நகர்ந்தான்..

வினுவின் வழக்கத்திற்கு மாறான வித்தியாசமான செயல்களால் ரொம்பவேகுழம்பியிருந்த அபி வினுவிடம் "என்னாச்சு அவசரமா வர சொன்னே இங்க வந்தாஎல்லாமே வித்தியாசமா இருக்கு.. என்ன நடந்துச்சுன்னு தெளிவா சொல்லு" என்றவனுக்கு பேரிடி வரும் என்று தெரிந்திருக்க நியாயம் இல்லை..

"நடந்தது எல்லாமே உனக்கு தெரியும் அபி.. இன்னிக்கி என்ன நாள் தெரியுமா ஞாபகம்இருக்கா?" என்று ஆரம்பித்து தொடர்ந்து அவள் பேசிய வார்த்தைகள் அபினவின்நெஞ்சில் முள்ளாய் தைக்க தொடங்கியது.. மெல்ல கடல் நீர் அபினவின் விழிகளில்இருந்தும் கசிய தொடங்கியது.. சுமார் 15 நிமிடங்கள் இடை விடாது பேசிய வினு விடைஎதிர் பாராமல் விருட்டென அங்கிருந்து எழுந்து சென்றாள்.. அவளை பெயர் கூறிஅழைக்க கூட திராணி அற்று விழிகள் குளமாய் நின்றான் அபினவ்..

மெல்ல மெரினாவின் கடல் அலை அபினவின் இதயத்துள்ளும் மோத ஆரம்பித்ததுஆழிப் பேரலையாய்..

(தொடர்ந்து எழுதுவோம்..)

No comments:

Post a Comment