வினுதா செல்லும் வழியையே வெறித்து பார்த்து கண்ணீர் சிந்திக் கொண்டிருந்தான் அபினவ். சுமார் 5 நிமிடங்கள் கடந்திருக்கும். மெல்லமெல்ல அவன் கண்ணீர் வறண்டு போக தொடங்கியது. இயல்பு நிலைக்கு திரும்பியவனாய் கடல் அலைகளின் பக்கம் கவனத்தைதிருப்பினான். கண்கள் மட்டுமே அவன் நினைத்ததை செய்தன அனால் மனமோ இன்னமும் வினுதா சென்ற திசை நோக்கி பறந்துகொண்டிருந்தது.
ஒளியினும் வேகமாய் பயணிக்க கூடிய ஒன்று உண்டெனில் அது மனித மனமே . நொடியில் பல்லாண்டுகள் பின்னோக்கி உருளும். சமயம் பார்த்து பல ஆண்டுகள் கழித்து நடக்கப்போவதை கற்பனை செய்யும். ஆனால் அது கடந்த காலத்தை நோக்கிப் பயணித்தாலும்எதிர் காலத்தை கற்பனை செய்தாலும், நிகழ் காலத்தில் அதன் நிலை துயரமாகத்தான் இருக்க வேண்டும். மகிழ்ச்சியாய் இருக்கும் சமயம்மனம் கடந்த கால நினைவுகளை அசை போடுவதில்லை. அபினவின் மனமும் வேகமாய் பயணித்தது.
சுமார் ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு...
எத்திராஜ் கல்லூரி வளாகம்..
ரம்பை ஊர்வசி மேனகை போன்ற பெண்களை இங்கு பலர் தேடி ஏமாந்து போனாலும் சிலருக்கு அதிர்ஷ்டம் அடிக்கத்தான் செய்கிறது.. அப்படிப்பட்ட அபூர்வமான அதிர்ஷ்டசாளிகளில் அபினவும் ஒருவன்..
அபினவ் மனம் முழுதும் ஸ்பென்சர்இல் .. லயோலா b - school இல் முதல் ஆண்டு சேர்ந்து சரியாய் 4 வாரங்கள் தான் ஓடியிருக்கும்.. வகுப்புகள் வழக்கம் போல் அலுக்க ஆரம்பித்தன. நண்பனிடம் இருந்து sms "மச்சி ஸ்பென்சர்ல இருக்கேன் கிளாஸ் முடிஞ்சதும்வந்துடு".. விக்கியின் sms இருந்த கொஞ்ச நஞ்ச ஆர்வத்திலும் மண் அள்ளி போட்டது.
கல்லூரி முடிந்ததும் நேரே நெரிசல் மிகு கல்லூரி சாலையில் 40 களிலும் 20 களிலும் மாறி மாறி pulsar ஐ முறுக்கினான். எத்திராஜ்கல்லூரி நெருங்கியவுடன் கண்கள் தானாய் அலை பாயத் தொடங்கியது.. மெல்ல பைக்கின் வேகமும் தணிந்தது .. சாலையை கடக்க தயாராய் இருந்த ஒரு பெண்ணின் காலில் அபினவோட பல்சரின் முன் சக்கரம் ஏறியது.. அம்ம்ம்ம்மா என்ற சிறுஅலறலை தொடர்ந்து "பொறம்போக்கு பார்த்து போக மாட்டே" வார்த்தைகள் கடினமாய் இருந்தாலும் குரல் மிகவும் இனிமையாய்ஒலித்தது அபினவிற்கு..
"sorry தெரியாம ஏறிடிச்சு" என்றவனின் வார்த்தையை காது கொடுத்து கேளாமல் தன் வழியே சென்றாள் அந்த பெண் விந்தி விந்தி.. வண்டியை stand போட்டு விட்டு அவளை நோக்கி சென்றான் அபி.. "ஏங்க sorry ங்க தெரியாம ஏறிடுச்சு.. நீங்க எங்க போனும்னுசொல்லுங்க நான் drop பண்ணிடறேன்" என்றவனுக்கு "ஆணியே புடுங்க வேணாம்" என்ற பதிலே கிடைத்தது..
அவளை பார்த்த மாத்திரத்திலேயே ஒரு இனம் புரியாத உணர்வு அபி மனதுள் பொங்கியது.. அவன் உள்ளுணர்வு அந்தப் பெண்ணைதொடரச் சொல்லியது.. அவன் வண்டி அவன் அனுமதியின்றி அதனை செய்ய தொடங்கியது..
ஸ்பென்சரில் காத்திருந்த நண்பனுக்கு அபியின் பயணம் எத்திராஜுடன் திசை மாறியது தெரிந்திருக்க நியாமில்லை..
-தொடர்ந்து எழுதுவோம்
gud one continue
ReplyDelete