முந்தைய மடல்கள் இதோ - மடல்-1 மடல்-2
மடல் - 3
வினுதா செல்லும் வழியை தொடர ஆரம்பித்தான் அபினவ். அவள் வேகம் மிகவும் குறைவாய் இருந்தது. பாவம் ரொம்ப வலிக்குது போலருக்கு.. பாத்து வந்துர்கலாம் என்று வருத்தப்பட்டான். பைக்கில் பின் தொடர்வது கடினம் என்று எண்ணிய அபி பைக்கை சாலை ஓரமாய் நிறுத்தி விட்டு நடக்க ஆரம்பித்தான்.
"எப்படியும் இவ வீடு பக்கத்துல தான் இருக்கும்.. நடந்து தான போறா.. பஸ் ஸ்டாப்ல வெய்ட் பண்ணல.. இவ வீட இன்னிக்கி கண்டு பிடிச்டனும்" என்று எண்ணிக் கொண்டு அவளை தொடர்ந்து ஃபாலோ செய்தான். "ஃபாலோ பண்றத கண்டுபிடிச்டா என்ன பண்றது?" என்ற கேள்வி அவனுள் முளைத்தது. உடனே நண்பன் ஒருவன் கூறிய டைலாக் பொறியில் தட்டியது. "மச்சான், பொண்ணுங்கள ஃபாலோ பண்ரப்ப நம்ம தாண்டா கவல படறோம் அவங்களுக்கு தெரியாம ஃபாலோ பண்ணனும்னு. ஆனா நம்ம மனசுல ஃபாலோ பண்ணனும்னு தோணின உடனேயே அது அவங்களுக்கும் தெரிஞ்சிடும். சும்மா தெரியாத மாதிரி வெட்டி சீன் பொடுவாங்க அவ்ளோதான்".
"ஒரு வேல நம்ம அவ பின்னாடி வந்துட்டு இருக்கறது தெரிஞ்சுர்குமோ... ச ச இருக்காது" என்று யோசித்து கொண்டிருக்கையில், "என்ன மிஸ்டர் உங்களுக்கு வேல வெட்டி எதுவும் இல்லயா.. எதுக்கு இப்பிடி பின்னாடி காணதத கண்டா மாதிரி வரீங்க.. போய் புள்ள குட்டிய படிக்க வெக்கிற வழிய பாருங்க.. போங்க" என்றாள் வினுதா..
"எனக்கு வேல வெட்டிலாம் இல்லங்க.. நான் MBA finance படிச்சுட்டுருக்கேன்.. also எனக்கு புள்ள குட்டியும் இல்ல.. அழகான பொண்ணா தேடிட்டு இருக்கேன் to get புள்ள குட்டி" என்று சற்று நக்கலாய் பதிலளித்தான். "ஜோக் அடிகர்தா நெனப்பு.. போய்யா வேலய பாத்துட்டு.. யாரு கேட்டா உன் பயோ-டேட்டா.. ஹ்ம்ம்ம்" என்று சொல்லி விட்டு அழகாய் இதழ்களை இரு முறை கோணிக்கொண்டாள்.
"இல்லங்க இது பயோ-டேட்டா இல்ல.. நீங்க கேட்ட கேள்விக்கு பதில்.. பயோ-டேட்டானா பேரு இருக்கும்ல.. i forgot to say my name.. நான் அபினவ்.. நீங்க"..
"அதான் ஏரியாக்கு 10 friends வெச்சு இருப்பீங்களே பொண்ணுங்க பேரு அட்ரெஸ் போன் நம்பர்லாம் கண்டுபிடிக்க.. அந்த நிபுணர் குழு கிட்ட சொல்லி கண்டுபிடிக்க சொல்லு" என்று அந்த இடத்தை விட்டு நகர்ந்தாள்..
"இது நக்கல் நையாண்டி மண்ட கணம் பிடிச்ச பார்ட்டியா இருக்கும் போலருக்கே.. அபி விடாதடா அவள" என்று தனக்குள் கூறிக் கொண்டு தொடர்ந்து அவளை ஃபாலோ செய்தான்..
ஒரு 15 நிமிடம் நடந்திருப்பாள் வினுதா.. அபியும் அவளை பின் தொடர்ந்து வந்திருந்தான். ஒரு அழகிய சிறு வீட்டிற்குள் நுழைந்தாள்.. சங்கீத சத்தம் இனிமையாய் கேட்டு கொண்டிருந்தது அந்த வீட்டிலிருந்து.. "ஆயாயோ இது தா தா ரி நா பார்ட்டி போலருக்கே" என்று அங்கலாய்த்துக் கொண்டான். "சரி கொஞ்ச நேரம் கேட்டு தான் பாப்போம்" என்று எண்ணி அங்கேயே நின்றான்.
"சமயாநிக்கி தகு மாதலாடனே பா மகரிரி" என்று மெல்ல அந்த சங்கீதத்தில் வினுதாவின் குரலும் இணைந்து, இசையை மேலும் இனிமை ஆக்கியது.
(தொடர்ந்து எழுதுவோம்..)
No comments:
Post a Comment