Tuesday, June 21, 2011

துயரக் கடிதம்

முந்தைய மடல்கள் இதோ  - மடல்-1 மடல்-2 மடல்-3  மடல்-4 மடல் - 5 மடல் -6


மடல் -7

விக்கி எதிராஜ் கல்லூரி அருகே சென்றதும் மனதிற்குள் "கழிசட பீட அர்த்த ராத்திரில தாலி அறுக்குறான்" என்று நினைத்துக்கொண்டு "இதுக்கு மேல எப்டிடா மாப்ள போவனும்?" என்று கேட்டான்.

"டே எனக்கு நடந்து போனாதான் வழி ஞாபகம் வரும்" என்றான் அபி.

"அட பொட்ட நாயே இந்நேரத்துக்கு பைக் இங்க வெச்சுட்டு நடந்து போனா வண்டிய போட்டுருவாங்க டா"

"மூடிட்டு பஸ் ஸ்டாப் பக்கத்துல வண்டிய நிப்பாட்டு"

விக்கி வேண்டா வெறுப்பாக வண்டியை நிறுத்திவிட்டு "எறங்கி தொல டா த்த்தா"

விக்கியும் அபியும், வினுதாவின் வீடு நோக்கி நடக்கலாயினர். அபியின் கை சரவண பவன் batura சைசுக்கு இருந்தது. "அபி கைல fracture போல இருக்குடா மச்சான். வாடா வீட்டுக்கு போலாம்; இந்த பொண்ண நாளைக்கி பாத்துக்கலாம்"

"விக்கி, இன்னிக்கி வீட்டுக்கு போனா வீட்டுல hospital கூட்டிட்டு போய்டுவாங்க. இந்நேரத்துக்கு சேஷு அங்கிள் வீட்டுக்கு போன் பண்ணி சொல்லி இருப்பாரு. நான் போன் சுவிட்ச் ஆப் பண்ணிட்டேன். so வீட்டுக்கு போறப்போ எனக்கு stretcher confirm மா ரெடியா இருக்கும்.. நாளைலேந்து வெளிய வர முடியாது. எனக்கு நீ கண்டிப்பா நாளக்கி இவளோட போன் நம்பர் கண்டுபிடிச்சு சொல்லணும்"

"ஏன்டா உன்ன ஸ்பென்சர் கூப்டது ஒரு குத்தமா"

"இல்ல உன்ன friend ஆக்கிகிட்டது குத்தம்.. நண்பனாடா நீயி"

நிலவு + சோடியம் விளக்கு வெளிச்சத்தில் சென்னை ரோடு கூட அழகாய் தெரிந்தது அபிக்கு. ஒரு வேளை அழகாய் தெரிந்தது வினுதாவின் வீடு இங்கு இருப்பதால் கூட இருக்கலாம். விக்கியின் முகத்தில் அந்த தெருவிற்குள் நுழைந்ததும் ஒரு அதிர்ச்சி பரவியது.

"விக்கி இதான்டா மாப்ள அவ வீடு". அபியின் வார்த்தையை கேட்டவுடன் விக்கியின் முகத்தில் அதிர்ச்சி அதிகமானது.

"மாப்ள என்னடா திடீர்னு டென்ஷன் ஆயிட்ட?"

"ஒன்னும் இல்ல டா; எந்த வீடு, இந்த olive green ல பெயிண்ட் பண்ணின வீடா?" என்று விக்கி வீட்டை confirm செய்து கொண்டான்.

"ஆமாடா இந்த வீட்டுக்குள்ள தான் டா போனா. மாடியிலேந்து நான் திரும்பி போறத கூட பாத்தாடா. பொண்ணு எதிராஜ்ல படிக்குறான்னு நெனக்கிறேன்"

"சரி டா அபி இப்போ நேரமாச்சு, முதல்ல நா உன்ன hospital கூட்டினு போறேன். மிச்சதெல்லாம் அப்புறமா பேசிக்கலாம், வா இப்போ கிளம்பலாம்"

"hospital வேணாம்டா மாப்ள வீட்டுல drop பண்ணிடு டா"

விக்கி அதை மதிக்காமல் அபியை hospitalலில் சேர்த்து விட்டு, பின்னர் அபியின் அம்மாவிற்கு போன் செய்து விஷயத்தை சொல்லி, hospital வெயிட்டிங் ஹாலில் எதையோ நினைத்தபடி சாய்ந்து படுத்துக்கொண்டான்.

அபியின் மனது பெயர் தெரியாத அந்த அழகு தேவதை உடன் இருக்க, விக்கியின் மனதிலோ அபி மற்றும் வினுதா மாறி மாறி வந்து போயினர்.

-- தொடர்ந்து எழுதுவோம்

Sunday, June 12, 2011

துயரக் கடிதம்

முந்தைய மடல்கள் இதோ  - மடல்-1 மடல்-2 மடல்-3  மடல்-4 மடல் - 5

மடல் -6

சென்னை சாலைகளின் டிராபிக்கை விட ஸ்பென்சரில் டிராபிக் நிறைய இருந்தது. சென்னை வெயிலில் கருகியிருந்த சுமார் பிகர்களும் மேக் அப்பில் கொஞ்சம் அழகாக இருந்தனர். அபி கண்ணிற்கு பார்க்கும் பெண்ணெல்லாம் வினுதாவாய் தெரிந்தார்கள். அந்த சுமார் பிகர்களை ஜொள்ளிகொண்டே விக்கி தன் வேலையை சரியாக ஆரம்பித்தான், "மச்சான் யார நெனச்சிட்டு வண்டி ஒட்டின உன் அத்தை பொண்ணு பூரணி யாடா? "

"நீ ஏண்டா அவ மேலயே கண்ணா இருக்க.. அவ அட்டு பீஸ் டா "

"மச்சா கூடவே இருந்தா கோஹினூர் கூட value  இல்லாம போய்டும்டா.."

லேசான சிரிப்புடன் இருவரும் pizza  ஆர்டர் செய்தனர்..

"இல்லடா மாப்ள இன்னிக்கி எதிராஜ் வாசல்ல ஒரு அழகான ...." என்று கதையை நீட்டி முழக்கி அபி சொல்லி முடிக்கவும், விக்கி சாப்பிட்ட pizza  ஏப்பமாய் வரவும் சரியாக இருந்தது. "என்ன சொன்ன மச்சா" என்றான் விக்கி. "Cheese  burster ல cheese  இருக்குன்னு சொன்னேன்.. திங்கிறதுலயே இரு".

"அடே அது எப்படி டா பார்த்த உடனே பொண்ணு பின்னாடி போறீங்க.."

"இது பின்னாடி போறது இல்லடா பக்கி.. இது லவ்..."

"லவ்வாமாம்.. நான் நீ ரோட்ல வண்டியோட பல்டி அடிக்கும்போதே நெனச்சேன்.. ஓவர் லவ் ஒடம்புக்கு ஆவாது மச்சான் அப்புறம் வயித்துக்குள்ள பட்டாம் பூச்சி பறக்கும்பீங்க அது உங்க இதயப்பூல உக்காந்து தேன் குடிக்குதும்பீங்க.. ஒன்னு கேட்டுகோ மச்சா இந்த பட்டாம் பூச்சி 2 நாளுல செத்துரும் உங்க லவ் 2  மாசத்துலையோ இல்ல எல்லா வேலையும் முடிஞ்சப்புரமோ செத்துரும்.  ஏண்டா இதுவரிக்கும் எத்தன பொண்ணுங்கள லவ் பண்ணிருக்க மனசாட்சிய தொட்டு சொல்லுடா..."

"மச்சிய் அதெல்லாம் அறியாத வயசுல வந்ததுடா இது வேற"

"எது வேற. . ஆமா 16  வயசுல எதிர் வீட்டு நிர்மலாவோட நீ பண்ணினது அறியாததா.. ஒன்னு உட்டேன்னுவை மூஞ்சி அப்பால போய் விழுவும்.. சரி இப்போ மட்டும் என்ன அறிஞ்சுட்ட நீயி எங்கயாவது போதி மரத்துக்கு கீழ உக்காந்து ஞானம் பொறந்துச்சா"

"மாப்ள i  am  matured  டா இப்போ"

"என்ன matured  5  பொண்ணுங்கள லவ் பண்ணி கலட்டிவுட்டா maturity  வந்துருமா.. நான் பாக்குறேன் நீ இந்த பொண்ண எம்புட்டு நாள் நெனச்சினு இருக்கன்னு"

"மாப்ள எனக்கு ஒரு ஹெல்ப் வேணும்டா"

"என்னது அந்த பொண்ணு யாரு என்ன குலம் கோத்ரம் லாம் சொல்லனுமா அதுக்கு வேற ஆள பாரு.. எனக்கு வேற வேல இருக்கு.."

"ஆமா இவரு பெரிய ஒபாமா.. வேலை இருக்குதாமா.. மூடிட்டு details  collect பண்ணு... ஆல் details  நாளக்கி evening  எனக்கு வேணும்.."

"என்னடா ஓவரா ஆர்டர் பண்ணற?"

"ஏன் நா உனக்காவ அனுஷா வோட detailsலாம் சொல்லல.. உங்களுக்காவ எங்க ecr வீடு ..." என்று ஆரம்பித்து அபி அதை முடிப்பதற்குள் விக்கி "த்தா சரி நிப்பாட்ட்ட்ட்ட்ட்ட்டு.. பொண்ணு வீடு தெரியும்ல இப்போ என்கூட வந்து காட்டி தொலடா"

"வெரி குட் இது நல்ல friendக்கு அடையாளம்.. எனக்கு கை வலிக்குது ரொம்ப நீ என்ன எங்க வீட்டுல விட்டுரு.. நம்ம வினோத் வீட்டுல என் வண்டிய வெச்சிடலாம்"

"எல்லாம் என் நேரம் டா வந்து தொல"

(வினோத் வீடு)

வினோத்...

காதில் செல்போனுடன் ஒரு வீணாய் போனவன் (பொழுதுக்கும் கடலையோடு வாழும் ஒருவனை வேற எப்புடி சொல்வது) வெளியே வந்தான்.. விக்கி "மச்சா அபி வண்டிய உங்க வீட்டுல இருக்கட்டும் டா" என்ற உடன் "ஓகே டா" என்ற ஒரு வரி விடையுடன் தன் கடலையை continue  செய்யலானான்.

விக்கி அபி  பில்லியனில் ஏறியதும் வண்டியை ஒட்டிக்கொண்டு "அந்த நாயை பார்த்தியாடா நல்லா இருகீங்களான்னுகூட கேக்கல"

இப்போது அபியின் கை நன்றாக வீங்கியே இருந்தது.. அந்த வலியோடு "நீ சுடிதார் போட்டுட்டு அவன் வீட்டுக்கு போயிருக்கனும்" என்று சொல்ல, டிராபிக் இல்லாத ரோட்டில் வண்டியின் accelerator முறுக்கும்  சத்தத்தில் இருவரது சிரிப்பும் மெல்ல கரைந்தது.. 

(தொடர்ந்து எழுதுவோம்..)