முந்தைய மடல்கள் இதோ - மடல்-1 மடல்-2 மடல்-3
மடல் - 4
அயோயோ இது ததரிந பார்ட்டி போலருக்கே தப்பான இடத்துல சிக்கிகிட்டியே அபி எஸ்கேப் என்று வந்த வழி மெல்ல திரும்பி நடக்கலானான் அவன் பைக் நோக்கி. சிறிது தூரம் சென்றவுடன் ஒரு முறை அவள் இல்லத்தை திரும்பி பார்த்தான்.. சற்றே அதிர்ந்து போனான். இவன் பைக் ஏற்றிய பெண்ணும் இன்னொரு பெண்ணும் இவனை பார்த்து சிரித்துக் கொண்டிருந்தார்கள். லூசுங்க என்று மனதுள் ஒரு குரல் ஒலிக்க அவன் மொபைலும் "பாஸு பாஸு பாஸு" என்று அந்த தெரு முழுக்க கேட்குமாறு அலறியது..
அருகில் சைக்கிள் ஒட்டிகொண்டிருந்த சிறுவர்களில் ஒருவன் "பாஸு ஆமா லூசு" என்று சிரிக்க, கோபம் வந்தாலும் சிரித்துக் கொண்டு phone எடுக்க வசை மழை செந்தமிழாய் இல்லை இல்லை சென்னை தமிழாய் ஒலித்தது.. போனில் நண்பன் விக்கி. கேநா புநா முதல் ஓநா கூநா வரை அனைத்தும் சரவெடியாய்.
"மச்சான் மச்சான் சாரி டா.. இங்க ஒரு figure டா அவள பாத்துடே போய்டேன்டா இன்னும் 10 நிமிஷத்துல வந்துடறேன்" இது அபி.
"எங்ககீர"
"ஏரியா கரெக்டா தெரில பட் எதிராஜ் பக்கம் டா"
"10 நிமிஷத்துல ம** புடுங்குவ"
"இல்ல மச்சான் செம figure டா அதான் டா ரூட் மாறிடுச்சி"
"டே பக்கி அது நிறைய அசோக் leyland போற highway யா இருக்க போகுது"
"வாய கழுவுடா ** ***"
"சரி சரி நா இங்க wait பணின்னு கீறேன் நீ வந்துரு" என்றான் தூய சென்னை தமிழில்.
"jiggry dhoshtu டா நீயி" என்று வண்டி எடுத்து ஸ்பென்சர் நோக்கி முறுக்கலானான்.. இன்னமும் அந்த இரு பெண்கள் இவனை நோக்கி சிரித்த வண்ணம் இருந்தனர். இவன் மனமும் கவனமும் pulsar மேலும் சாலை மீதும் இல்லாமல் வினுதாவை நோக்கி பறக்க ஆரம்பித்தது.
வானம் தன் வனப்பிற்கு வனப்பு சேர்க்க அந்தி வெயில் ஆடை அணிந்து இருக்க, அபியின் மனமோ அந்த பெண்ணை அந்தி வண்ண ஆடையில் உருவகப்படுத்தி பார்க்க
டோம் டும் டாமட டும் என்று metal தரையில் மோதும் சத்தமும் அபியின் அம்ம்ம்மாஆ என்ற சத்தமும் இணைந்து harmony யாய் ஒலித்தது.
(தொடர்ந்து எழுதுவோம்..)
No comments:
Post a Comment