முந்தைய மடல்கள் இதோ - மடல்-1 மடல்-2 மடல்-3 மடல்-4
மடல் - 5
பின்னி ரோட்டில் ஒரு சிறிய சலசலப்பு..
சென்னை பொதுமக்கள் அனைவரும் கடமை உணர்ச்சி தவறாது வண்டியை ஓரமாய் நிறுத்தி விட்டு சாலை கூட்டத்தில் கலந்து வேடிக்கை பார்த்தனர். சிலர் ரவி சாஸ்திரி range இற்கு கமெண்ட்ரி கொடுத்தனர்.
"circus மாதிரி இருந்துச்சுங்க சும்மா நல்ல வேகமா வந்து 4 பல்டி அடிச்சாருங்க"
"சூப்பரா ஓட்னு வந்தாப்டி என்ன நெனச்சாரோ வித்தை காம்சாரு பா நா பைக் நிறுத்திட்டு விசில் அடிச்சேன்னா பாத்துகோயேன்"
"மும்பை எக்ஸ்பிரஸ் படத்துல கூண்டுக்குள்ள கமல் பண்ணத இவரு ரோட்ல பன்னாருயா சாகசகாரன் பா இவரு"
இந்த கலாய்க்கும் கூட்டத்தின் நடுவே சுமார் 50 வயது மனிதர் ஒருவர் "நீ அபினவ் தானே. இந்த பக்கம் என்ன பண்றே"
"நாஷ்தா துன்றாங்கோ" என்று மனதுள் நினைத்துக்கொண்டு "சேஷு அங்கிள் இந்த பக்கம் friend பார்க்க வந்துர்ந்தேன் ஸ்லிப் ஆய்டுச்சு"
"அடி பட்டு இருக்கா" என்று அக்கறையாய் அருகில் சென்று விசாரித்தார்.
"நல்லா கேட்குறான்யா detailu" (இதுவும் மனதிற்குள் தான்) "இல்ல அங்கிள் லேசா ஸ்க்ராட்ச் அவ்ளோதான்"
"ok கார்ல ஏறிக்கோ வண்டி என் டிரைவர் எடுத்து கொண்டுவந்து வீட்ல கொடுத்துருவான்"
"அயோயோ இந்த கிரகம் புடிச்ச பெருசு அப்பா கிட்ட செமயா போட்டு கொடுக்குமே" "இல்ல அங்கிள் என் friend கு போன் பண்ணி இருக்கேன் ஸ்பென்சர் ல தான் இருக்கான் நான் அவனோட போய்டுவேன். தேங்க்ஸ் அங்கிள் ஒன்னும் problem இல்லை" என்று சமாளிக்கவும் விக்கி "மச்சி செம dive அடிச்சியாமா அந்த பொண்ண நெனசினு ஒட்டினியா" என்று நக்கலுடன் வரவும் timing செமயா மேட்ச் ஆனது.
"மாப்ள நீ குண்டும் குழியுமா இருக்கற ரோட்ல விழுந்து இருந்தா கூட பரவா இல்ல இப்டி மூக்கு முழியுமா இருக்கற பொண்ண நெனச்சு நல்ல ரோட்ல பல்டி அடிச்டியே டா"
சூழ்நிலை புரியாமல் மொக்க போடும் விக்கியை மனதுள் திட்டி கொண்டு "அங்கிள் என் friend வந்துட்டான் நா போய்டுவேன் நீங்க போங்க அங்கிள், விக்கி இது என் அப்பா colleague " என்று அவன் வாயை அடைக்க intro செய்தான்.
சேஷாத்ரியும் தலையில் அடித்துக்கொண்டு அங்கிருந்து நகர்ந்தார். டிராபிக் போலீஸ் ஒருவரும் வந்து கூட்டத்த கலைங்க என்று அனைவரையும் நகர்த்த விக்கி மற்றும் அபியும் ஓடும் டிராபிக் இல் கலந்தனர்.
பின்னி ரோடு மீண்டும் பரபரப்பானது.
(தொடர்ந்து எழுதுவோம் )
No comments:
Post a Comment